என் உலகம்

கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நக்கல், கொஞ்சம் கனவு, கொஞ்சம் கவிதை, கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் கோபம் எல்லாம் சேர்ந்த ஒரு கற்பனை உலகம் இது...

இங்கு வாசகனும் விமர்சகனும் நீங்கள் தான்.. வாசகனாக ஒரு மலரையோ விமர்சகனாக ஒரு வித்தையோ விட்டுச் செல்லுங்கள்....

Wednesday, March 15, 2006

வரம்
மீண்டும் குழந்தையாகும்
வரம் வேண்டும் எனக்கு

முறிந்த இதயத்தின்
வலியை விட
முழங்கால் சிராய்ப்புகளின்
வலிகள் அதிகமில்லையே !!


(ஒர் தோழியின் ஆங்கில வலைப்பதிவில் படித்தது)

18 Comments:

At 11:05 PM, Blogger sivagnanamji(#16342789) said...

vizhuvadhu ezhuvadharkke..
maraivadhu udhippatharkke...

 
At 12:44 AM, Blogger வெட்டிப்பயல் said...

ஆமாமா! அப்பதான் எலந்த வடை, கமர்கட்டு சாப்பிட்டாலும் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க!

 
At 10:45 PM, Anonymous Anonymous said...

manga

 
At 4:51 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க sivagnanamji,
//vizhuvadhu ezhuvadharkke..//

மண்ணில் விழுந்த மழைத் துளி மீண்டும் அதேத் துளியாக மாறுமா??

மீண்டும் மேகமாக எழுந்தாலும் அந்த துளி கிடைக்காதே.. உடைந்த இதயமும் அது போல் தான்.

 
At 4:53 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க பார்த்திபன்,

//ஆமாமா! அப்பதான் எலந்த வடை, கமர்கட்டு சாப்பிட்டாலும் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க//

இப்பவும் சாப்பிடலாங்க...

 
At 4:53 AM, Blogger ஆர்த்தி said...

//Anonymous said...
manga//

???

 
At 8:22 AM, Blogger வெட்டிப்பயல் said...

நோ நோ இப்பல்லாம் சாப்பிடக் கூடாது. பெரிய ஆளுங்கல்லாம் கிண்டல் செய்வாங்க!

அங்க பாருங்க அனானி மாங்கா ன்னு கேக்குறாரு, அவரு இஸ்கூலு வயசுலே துண்ணுருப்பாரு போல! நான் கமர்கட்டோட சரி.

அப்புறம் சீசனுக்குத் தக்கவாறு எலந்தைப்பழம், மாங்கா, கொய்யாக்கா, நெல்லிக்கா, கெலாக்கா ....

ஐய்யயோ எல்லாத்தையும் ஞாபகப் படுத்தீட்டீங்களே!
:-)

 
At 3:43 PM, Blogger sivagnanamji(#16342789) said...

mazhai thuli pirandadhu mannil vizhuvadharkke...mannil vizhadha mazhai thuliyal yarukku enna payan?
naan solla virumbuvadhu: udaindhadhai enni enni iruppadhai marappadho niyayam.....eduvume azhivadhillai.....oru vadivam azindhal adhilirundhu innoru vadivam thonrum
oru kadhavu moodinal matroru kadhavu engo thiranthirukkum
sariya?

 
At 4:01 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க பார்த்திபன்,

//நோ நோ இப்பல்லாம் சாப்பிடக் கூடாது. பெரிய ஆளுங்கல்லாம் கிண்டல் செய்வாங்க! //

யாருங்க பெரியவுங்க? அவர்களுக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கும். 'ரொம்ப நல்லா இருக்கு.. உங்களுக்கு வேணுமா'னு கேளுங்க.

ஒன்னு அவர்களும் சேர்ந்துக்குவாங்க, அல்லது imageஐ காப்பாத்திக்க இடத்தை காலிபண்ணிடுவாங்க.


அன்புடன்,
ஆர்த்தி.

 
At 4:02 AM, Blogger ஆர்த்தி said...

//sariya? //

சரி... சரி..

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 6:07 PM, Anonymous விஜி said...

அருமை ஆர்த்தி....நிஜமான ஒரு வரிகளை கொண்டு வந்திருக்கின்றீர்கள்..
சிராய்ப்புகள் தாங்கிவிடலாம்...அந்த சிராய்ப்புகளை நீக்க்கிவிடவும் நம்மை தூக்கி விடவும் உண்மைஉறவுகள் ஆயிரம் இருக்கும் அந்த வயதில்....

வாழ்த்துக்கள் ஆர்த்தி...

 
At 5:31 AM, Blogger ஆர்த்தி said...

நன்றி விஜி.


//அந்த சிராய்ப்புகளை நீக்க்கிவிடவும் நம்மை தூக்கி விடவும் உண்மைஉறவுகள் ஆயிரம் இருக்கும் அந்த வயதில்....//

உண்மைஉறவுகள் - மிகச் சரி.
அன்புடன்,
ஆர்த்தி.

 
At 5:47 AM, Blogger சிங். செயகுமார். said...

இதயத்தில் என்னம்மா வலி
எண்ணெய்யும் வெண்ணெய்யும்
எதிரியம்மா உடம்புக்கு
குமரியாம் உனக்கு
எட்டும் தூரத்தில் குடம்
ஏனோ உனக்கும்
எண்ணெய்க்கும் காதல்
வந்த வினை
நொந்த வினை நோவதேன்

குழந்தையாம் கண்ணன்
குட்டிகரணம் போட்டாலும்
எட்டவில்லையே
எண்ணை குடம்
முட்டி போட்டு
தத்தி தவறி
எட்டியது குடம்
பட்டென உடைந்தது குடம்
உடைந்த குடம்
உருகிய வெண்ணெய்
தவழ்ந்த காலில்
தைலமாய் கோலம் போட
வலியும் இல்லை
வலிகொண்ட சுவடும் இல்லை


மீண்டும் குழந்தையானால்
தீண்டும் இன்பம்
திகட்டும் இந்த கவி
புகட்டுவது யார்?

 
At 9:18 PM, Blogger தேவ் | Dev said...

சும்மா நச்சுன்னு ஒரு கவிதை....
அந்தக் ஆங்கில கவிதைப் படைப்பாளிக்கு மறக்காமல் என் வாழ்த்தைச் சொல்லிடுங்க...

 
At 4:15 AM, Blogger நிலவு நண்பன் said...

கவிதையில் ஒரு மெல்லிய சோகம் படருகிறது ஆர்த்தி.

தேர்வு செய்து இட்டமைக்கு நன்றி.

ம்ஹ{ம் எல்லாருக்கும் ஆசைதான்..அந்த நிலாக்காலங்களுக்குள் மீண்டும் பணயப்படமாட்டோமா என்று..

 
At 6:05 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க சிங். செயகுமார்,

மீண்டும் குழந்தையானால், குற்றம் சொல்லும் மனதைவிட கொஞ்சி விளையாடும் மனம் அதிகம் கிடைக்குமே... மண் அள்ளித்தின்றாலும்.. வெண்ணையைத் திருடினாலும்..

 
At 6:05 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க Dev,

//அந்தக் ஆங்கில கவிதைப் படைப்பாளிக்கு மறக்காமல் என் வாழ்த்தைச் சொல்லிடுங்க...//

நிச்சயமா...

 
At 6:05 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க நிலவு நண்பன்,

//ம்ஹ{ம் எல்லாருக்கும் ஆசைதான்..அந்த நிலாக்காலங்களுக்குள் மீண்டும் பணயப்படமாட்டோமா என்று..//

"பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லையொரு துன்பமடா" என்று ஒரு பாடலில் கேட்ட நினைவு வருகிறது.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home