என் உலகம்

கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நக்கல், கொஞ்சம் கனவு, கொஞ்சம் கவிதை, கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் கோபம் எல்லாம் சேர்ந்த ஒரு கற்பனை உலகம் இது...

இங்கு வாசகனும் விமர்சகனும் நீங்கள் தான்.. வாசகனாக ஒரு மலரையோ விமர்சகனாக ஒரு வித்தையோ விட்டுச் செல்லுங்கள்....

Wednesday, March 01, 2006

விளக்கம் சொல்லுங்களேன்..

விளையாட்டெல்லாம் இல்லங்க... கொஞ்சம் சீரியசாய் ஒரு கேள்வி..

நேற்று திரு.சிற்பி அவர்கள் எழுதிய 'பூஜ்யங்களின் சங்கிலி' என்ற புத்தகம் படிக்க நேர்ந்த்து. அதில் படித்த வரிகள் இவை...

கால முட்டையின்
ஓடு பிளக்கிறேன்
குஞ்சாய் நானே
குதித்து வருகிறேன்


என்ன குழப்பம் என்று சொல்லத் தெரியாத ஒரு குழப்பம்................


எனக்கு விளக்கம் சொல்லுங்களேன்.. இந்த வரிகளுக்கு

5 Comments:

At 4:31 AM, Blogger ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

சமகாலத்தை பதிவு செய்யும் கவிஞன்.. அந்த காலகட்டத்தில் தான் வாழ்கிறான். ஆனால்; அவன் ஒரு விஷயத்தை பதிவு செய்த பின்.. அது வரலாறாகி விடுகிறது.

அதன் பின்னும் அவன் இதே உலகினில் தான் வலம் வருகிறான்.
அதைத் தான்
//கால முட்டையின்
ஓடு பிளக்கிறேன்
குஞ்சாய் நானே
குதித்து வருகிறேன்//

என்கிறார் சிற்பி.

 
At 4:36 AM, Blogger நாகு said...

சில நேரங்களில் புதுக்கவிதை அணுப்பிளவுமாதிரி இருக்கும்‚ அனுபவிக்கமுடியும் ஆனால் விளக்கம் சொல்ல கஷ்டமாக இருக்கும்‚ இதுவும் அப்படித்தான்.

 
At 10:51 AM, Blogger Jeeves said...

ஒன்றாகி.. பலவாகி பலவும் கலந்து மீண்டும் ஒன்றாகும்.. காலச்சக்கரம்.. அதே தாங்க இதுவும்

 
At 9:03 PM, Blogger ஜொள்ளுப்பாண்டி said...

அடடா ஆர்த்தி
யாராவது டவுட் கேட்டா விளக்கம் சொல்லாம எனக்கு தூக்கம் வராதே ! பாவம் பின்னூட்டமும் ஒன்னும் வரலே ! வந்ததும் உங்களை மேலும் குழப்பி விட்டுடுச்சு !சரி இந்த பாமரனுக்கு புரிஞ்சதை சொல்றேன் கேக்கறீங்களா ?


கோழி முட்டைய ஒடைச்சா திருப்பி ஒட்டமுடியுமா? முடியாது . அப்படியே ஒட்டுனாலும் உள்ள இருந்து ஒழுகுன முட்டைகருவை திணிக்க முடியுமா? முடியாது. ஆது மாதிரிதான் காலம் போச்சுன்னா போனதுதான்.

அப்படி கழியுர காலத்தைதான் நம்ம கவிஞரு கோழிகுஞ்சு முட்டைய பொளந்துகிட்டு வெளிய புதுசா உலகத்தைப் பாக்குமே அப்படி பொறக்குர ஒவ்வொரு புது நிமிஷத்தையும் பார்க்கறாருங்கோ !

சரி சரி கை தட்டி விசிலடிச்சது போதும் ! கொஞ்சம் சோடா குடுங்க ஆர்த்தி !

 
At 5:58 AM, Blogger ஆர்த்தி said...

விளக்கம் சொன்ன எஸ்.பாலபாரதி,Nagarajan,Jeeves, ஜொள்ளுப்பாண்டி எல்லாருக்கும் நன்றி..


அன்புடன்,
ஆர்த்தி.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home