என் உலகம்

கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நக்கல், கொஞ்சம் கனவு, கொஞ்சம் கவிதை, கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் கோபம் எல்லாம் சேர்ந்த ஒரு கற்பனை உலகம் இது...

இங்கு வாசகனும் விமர்சகனும் நீங்கள் தான்.. வாசகனாக ஒரு மலரையோ விமர்சகனாக ஒரு வித்தையோ விட்டுச் செல்லுங்கள்....

Wednesday, March 08, 2006

விளக்கம் சொல்லுங்களேன் - #2

1. 'கணினியில் வைரஸ் எப்படி வேலை செய்கிறது' என்பதை ஒரு 70வயது பாட்டியிடம் எப்படி சொல்லி புரிய வைப்பீங்க?

2. Yahoo Messenger, MSN Messenger, AOL Messenger போன்றவற்றில் என்ன மேன்பாடுகள் (improvements) கொண்டுவரலாம்?

உங்களுக்கு தோன்றிய பதில சொல்லுங்களேன்...

அன்புடன்,
ஆர்த்தி.

30 Comments:

At 9:35 PM, Blogger sivagnanamji(#16342789) said...

i dontknow all these things
why you were not seen for the past seven days?
sinna sinna kavithaigalum kurumbugalum illame bore 'pa

 
At 9:49 PM, Blogger sivagnanamji(#16342789) said...

1 just tell how arthy works in computer. she will undrstand how virus worksin computer
2-by oferring a wage hike+ maruthy car to all messengers

 
At 2:59 AM, Anonymous Anonymous said...

dont you have no work other than asking childish questions?
- Shalini

 
At 4:06 AM, Blogger ஆர்த்தி said...

The questions might be childish to you Shalini... But I need the answer for them, why can't you give me some answers?

Arthy

 
At 4:20 AM, Blogger கைப்புள்ள said...

நான் பதில் சொல்ல மாட்டேன்...ஊஹும் சொல்ல மாட்டேன்னா சொல்ல மாட்டேன் தான்...என்னை கட்டாயப்படுத்தாதீங்க...இந்த வாட்டி நான் "பேக்கு" ஆகமாட்டேன்...நோ!

 
At 6:09 AM, Blogger வரவனையான் said...

நல்ல கேள்விதான் ? விடை தெரிந்தால் மின்னஞ்சல் அனுப்பவும்

செந்தில்
செந்தில்பக்கம்.blogspot.com

 
At 6:10 AM, Blogger வரவனையான் said...

நல்ல கேள்விதான் ? விடை தெரிந்தால் மின்னஞ்சல் அனுப்பவும்

செந்தில்
செந்தில்பக்கம்.blogspot.com

 
At 6:55 AM, Blogger sivagnanamji(#16342789) said...

69 pattigalidamum sonnadhaiye
70 vadhu pattiyidamum solla vendum

 
At 6:08 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க கைப்புள்ள,
இது விளையாட்டுக்கு கேட்ட கேள்வி இல்லங்க..

எனக்கும் பதில் தெரியாது-இது தான் உண்மை.
நீங்க என்ன பதில் சொன்னாலும் நான் 'அப்படியா'னு கேட்டுக்கனும்.

(நரி வருது நரி வருதுனு சொன்ன கதையாகிவிட்டதே..)

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 6:13 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க செந்தில்,

ல் முறையா நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்க.. வாங்க.

//விடை தெரிந்தால் மின்னஞ்சல் அனுப்பவும்//
நிச்சயமாக

உங்களுக்கு பதில் தெரிந்தாலும் கொஞ்சம் நமக்கு சொல்லுங்க...

 
At 6:17 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க sivagnanamji,
//sinna sinna kavithaigalum kurumbugalum illame bore 'pa //
:)


//69 pattigalidamum sonnadhaiye
70 vadhu pattiyidamum solla vendum //

ஆ.. கடி

 
At 9:05 AM, Blogger paazh said...

1.வைரஸ் கணினியில் எப்படி பரவுகிறது எப்படி ஒரு ப்ரொக்ராமை பாதிக்கிறது என்பதை பொறுத்து அது வேலை செய்யும் விதம் மாறுபடுகிறது,அதனால் அதை பொதுவாக விவரிப்பது சற்று கடினம்...இதற்கு கணினி பற்றிய தெளிந்த ஞானம் உடையவராலேயே எளிமையான விளக்கம் தரமுடியும்...

இருப்பினும் என்னால் முடிந்தவரை இதற்கு விடைதர முயற்சிக்கிறேன்:

பழி உணர்வை(வைரஸ்) சுமந்த கூனி(ப்ரொக்ராம்)தசரத குடும்பத்துள்(கணினி)நுழைகிறாள்.கூனி நேரம் பார்த்து தன் செயல்பாட்டை துவக்குகிறாள்(ப்ரொக்ராம் இயங்கும் போது அதனுள் இருக்கும் வைரஸ் இயங்குகிறது)
பலகீனமான கைகேயியை(கணினியில் இயங்கும் ஒரு ப்ரொக்ராம்)பாதிக்கிறாள் தன் சூழ்ச்சியால் நச்சை விதைக்கிறாள்(கணினியில் உள்ள ஒரு ப்ரொக்ராமை முதலில் பாதிக்கும் வைரஸ் அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது அல்லது அதற்குள் வைரஸ் 'கோட்'ஐ திணிக்கிறது)சூழ்ச்சியில் வீழ்ந்த கைகேயி தசரதனிடம் வரம் கேட்கிறாள்(வைரஸ் ஒரு ப்ரொக்ராமிலிருந்து இன்னொரு ப்ரொக்ராமுக்கு பரவுகிறது)விளைவு..தசரதன் மரணம்,இராமன் வனவாசம்,பரதன் தன் விருப்பத்திற்கு மாறாக ஆட்சி பொறுப்பில்(கணினியோ அல்லது அதில் உள்ள ப்ரொக்ராமோ செயலிழக்கலாம்,பழுதடையலாம்,தான் செய்ய வேண்டியதற்கு எதிர்மாறாக செயல்படலாம், வைரஸை பொறுத்து மேற்ச்சொன்ன எல்லாமும் நிகழலாம் அல்லது ஏதேனும் ஒன்று மட்டும் நிகழலாம்)

 
At 10:16 AM, Blogger sivagnanamji(#16342789) said...

pls go through the question no 2
70 vadhu pattikku enrudhan ulladhu

 
At 10:48 AM, Blogger paazh said...

2. Yahoo Messenger, MSN Messenger, AOL Messenger போன்றவற்றில் என்ன மேன்பாடுகள் (improvements) கொண்டுவரலாம்?

1)எந்த மெசெஞ்சரிலிருந்தும் வேறெந்த மெசெஞ்சருடனும் தொடர்பு கொள்ள முடிய வேண்டும் (yahoo<----->Msn<----->rediff>etc)
2)மெசெஞ்சரிலிருந்தே மின் - அஞ்சல் அனுப்பும் வசதி...
3)பேச்சை எழுத்தாக மாற்றும்(speech to text)வசதி...
4)எழுத்து,பேச்சு போல 'அனிமேஷன் சாட்' முறை உருவாக்கப்பட வேண்டும்..
5)மெசெஞ்சரில் ஒரு ஆடியோ-விடியோ ப்ளேயர் இருக்க வேண்டும்...(நான் இரசிக்கும் ஒரு பாடலை நண்பரோடு பகிர்ந்துகொண்டு அப்பாடல் பற்றிய அபிப்ராயங்களை கேட்டபடியே பகிர்ந்துகொள்ளும் வகையில்..)

 
At 8:59 PM, Blogger ஆர்த்தி said...

ஒரு 'ய' போட மறந்துட்டேன்.. வயது வது என்று மாறிவிட்டது. இப்படி கடிச்சுட்டீங்களே...

 
At 10:05 PM, Anonymous Anonymous said...

Aarthy you have the curiocity to how things function. Intha madhiri thedal than ella vidaikalaiyum name thedipperamudiyum. Like in some other blogs tasteless, flovourless discussions in this hi-tech blogs payanpaduvathu etrukkolla mudiyavillai-thangam

 
At 10:34 PM, Blogger கைப்புள்ள said...

//(நரி வருது நரி வருதுனு சொன்ன கதையாகிவிட்டதே..)//

என்ன இது பச்சப்புள்ளயாட்டம் பேசிக்கிட்டு...எங்கூர்ல எல்லாம் புலி வருது புலி வருதுன்னு தான் சொல்லுவான்கிய. பாப்பா! ஒனக்கு நரியைப் பாத்தா பயம்னா கைப்புள்ள மாமா பேரைச் சொல்லிக்க...எங்கிட்டோ ஓடிட்டிருக்குற நரியைக் கொண்டாந்து பீச்சாங்காலாலேயே கதற கதற எத்துன பரம்பரை நாங்க...நரி ஒன் வம்புக்கே வராது...என்ன வர்ட்டா?

 
At 11:03 PM, Blogger ஆர்த்தி said...

மிகவும் நன்றி paazh. நீங்கள் கொடுத்த விடைகள் நன்றாக இருந்தது. நன்றி

 
At 11:57 PM, Blogger ஆர்த்தி said...

வாங்க தங்கம்,

நீங்க சொல்ல வருவது எனக்கு புரியவில்லை !!

 
At 12:07 AM, Blogger ஆர்த்தி said...

//பாப்பா! ஒனக்கு நரியைப் பாத்தா பயம்னா கைப்புள்ள மாமா பேரைச் சொல்லிக்க//

அடடா, வாங்க மாமா.. இப்படி ஒரு தைரியசாலி இருப்பது இதுவரை தெரியாம போச்சே..

 
At 4:52 AM, Anonymous Anonymous said...

Try the following link

http://computer.howstuffworks.com/virus.htm

 
At 7:21 AM, Blogger ஆர்த்தி said...

Thanks Anonymous.. Thats really a informative site

Arthy

 
At 6:37 AM, Blogger கார்த்திகேயன் said...

பாழ் அவர்களின் பதிலை மிகவும் ரசித்தேன்... இராமன் கதையை வைரஸோடு தொடர்பு படுத்தியமைக்கு...

அவரே 'அரட்டை தூதுவர்கள்' பற்றி கொடுத்த விளக்கமும் நன்று...

"HowStuffWorks" தவிர இந்த வலைதளத்திலும் வைரஸ் பற்றி போட்டிருக்கிறார்கள்...

நன்றிங்க ஆர்த்தி...

அன்புடன்
கார்த்திகேயன்

 
At 4:41 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க கார்த்திகேயன்,
I saw the site that you have given. The information there is about virus.. that's useful. But the question is not about how a virus works.

The question is how do you explain how a virus works for a 70yr old granny

(This is an interview question)

Arthy.

 
At 8:42 PM, Blogger கார்த்திகேயன் said...

பாழ் சொன்ன அழகான உதாரணம் தவிர மேலும் ஒரு 'உதார்'அணம்:

உங்க பாட்டி மெகா சீரியல் பாக்கிறவங்களா இருந்தா... அந்த தொடரின் வில்லிதான் வைரஸ்னு சொல்லிடுங்க... (வில்லிகள் குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்துறாங்க இல்ல)

ஆமா எந்த இன்டர்வியூவில இதெல்லாம் கேட்கிறாங்க?

 
At 3:53 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க கார்த்திகேயன்,

//உங்க பாட்டி மெகா சீரியல் பாக்கிறவங்களா இருந்தா... அந்த தொடரின் வில்லிதான் வைரஸ்னு சொல்லிடுங்க... (வில்லிகள் குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்துறாங்க இல்ல)//

:))


//ஆமா எந்த இன்டர்வியூவில இதெல்லாம் கேட்கிறாங்க? //

Where else... in a MNC software company. (To check Presence of mind.. i guess)


அன்புடன்,
ஆர்த்தி.

 
At 2:38 AM, Anonymous Anonymous said...

Ada pavingala indha kelvi kekuradhukkune hotella Room pottu yosikirainga pola....
-r@j

 
At 5:42 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க ராஜ்,
//Ada pavingala indha kelvi kekuradhukkune hotella Room pottu yosikirainga pola....//

அது அவன் பொழப்பு...அன்புடன்,
ஆர்த்தி.

 
At 3:27 AM, Anonymous johan -paris said...

அடி ஆத்தாடி!
நானே;நாளும் இந்த வைரசோட அல்லாடுறன், என் மேல்வீடு இதை என்னனு நினைகுதெண்டா!கணணியெண்டா! ஒரு கண்ணுதெரியாத பாட்டாவோ,பாட்டியோ போல; வைச்சது;வைச்ச இடத்தில் இருந்தால் தான் அவங்க உலாவுவாங்க? வைரசு என்பது நம்மவீட்டு குழப்படிப் புள்ளைகள் போல எல்லாத்தயும் தாறுமாற போடுறது.
அப்போ கணணி எண்ட பாட்டா பாட்டி, இயங்காமல் ;முடங்கிவிடுவன்க!!!,அந்த நேரம் வீட்டில சில நல்ல புள்ளைகளும், இருப்பாங்களா, அவன்கதான் அன்ரிவைரசுங்க?,எல்லாத்தையும் சரியாக்கி ;பாட்டா பாட்டியை உலாவ விடுவாங்க!
அவங்களுக்கு; பாட்டா பாட்டி மிட்டாயோ,காசோகொடுப்பாங்க,,! அது தான் அன்ரிவைரசுக்குக் கொடுத்த கூலி. இது சரியாங்க???
இதயும்;மீறி பாட்டா பாட்டி எக்கசக்கமா! விழுந்து தொலைச்சு, தலையில அடிபட்டு ;சீரிஸ் ஆகினா;தொம்பிதான், தூக்கிக் கடாசவேண்டியது தான்.
சரியாங்க?
யோகன்
பாரிஸ்

 
At 7:12 AM, Blogger Amzath said...

naan solvaen.....
paati...nee vadai sutapoa oru nari differenta think panuchae...antha thinking paeru thaan VIRUS nu solvaen.... ithu ok va??

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home