என் உலகம்

கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நக்கல், கொஞ்சம் கனவு, கொஞ்சம் கவிதை, கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் கோபம் எல்லாம் சேர்ந்த ஒரு கற்பனை உலகம் இது...

இங்கு வாசகனும் விமர்சகனும் நீங்கள் தான்.. வாசகனாக ஒரு மலரையோ விமர்சகனாக ஒரு வித்தையோ விட்டுச் செல்லுங்கள்....

Thursday, April 13, 2006

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்அவநம்பிக்கைகளை அஸ்தமனமாக்கி
ஆசைகளை அடிமையாக்கி
நிகழ்காலத்தில் நிதானமாக வாழ்ந்து
உழைப்பை உன்னதமாக்கி
நம்பிக்கையை நமதாக்கி
எதிர்காலத்தை ஏற்றமாக்கலாம்
உலகத்தை நமதாக்கலாம்


இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


அன்புடன்,
ஆர்த்தி.

Wednesday, April 05, 2006

சிவாஜி - Punch Dialogues

ரஜினி ரசிகர்கள் என்னை மன்னியுங்கள்...Monday, March 27, 2006

கண்டுபிடீங்க... - #03

இங்க இருப்பது யாரு... கண்டுபிடிங்க
(தெரியலனா, படத்தின் மேல் க்ளிக் செய்யுங்க...)

Wednesday, March 15, 2006

வரம்
மீண்டும் குழந்தையாகும்
வரம் வேண்டும் எனக்கு

முறிந்த இதயத்தின்
வலியை விட
முழங்கால் சிராய்ப்புகளின்
வலிகள் அதிகமில்லையே !!


(ஒர் தோழியின் ஆங்கில வலைப்பதிவில் படித்தது)

Sunday, March 12, 2006

நகரத்தில் வாழ்க்கை - #2

சொந்தமாக நிலாவல்ல
சொந்தங்களோடு
நிலாச் சோறு கூட
இங்கு கனவுகளில் தான்.

-0-

உறவுமுறைகளை
அகராதியில் தேடும்
உறவை
அருங்காட்சியகத்தில் சேர்க்கும்

Wednesday, March 08, 2006

விளக்கம் சொல்லுங்களேன் - #2

1. 'கணினியில் வைரஸ் எப்படி வேலை செய்கிறது' என்பதை ஒரு 70வயது பாட்டியிடம் எப்படி சொல்லி புரிய வைப்பீங்க?

2. Yahoo Messenger, MSN Messenger, AOL Messenger போன்றவற்றில் என்ன மேன்பாடுகள் (improvements) கொண்டுவரலாம்?

உங்களுக்கு தோன்றிய பதில சொல்லுங்களேன்...

அன்புடன்,
ஆர்த்தி.

Wednesday, March 01, 2006

விளக்கம் சொல்லுங்களேன்..

விளையாட்டெல்லாம் இல்லங்க... கொஞ்சம் சீரியசாய் ஒரு கேள்வி..

நேற்று திரு.சிற்பி அவர்கள் எழுதிய 'பூஜ்யங்களின் சங்கிலி' என்ற புத்தகம் படிக்க நேர்ந்த்து. அதில் படித்த வரிகள் இவை...

கால முட்டையின்
ஓடு பிளக்கிறேன்
குஞ்சாய் நானே
குதித்து வருகிறேன்


என்ன குழப்பம் என்று சொல்லத் தெரியாத ஒரு குழப்பம்................


எனக்கு விளக்கம் சொல்லுங்களேன்.. இந்த வரிகளுக்கு